need help?
9443176269அட்சய திருதியை தங்கம் வாங்கினால் பன்மடங்காகப் பெருகும், தீராத கடன்களையும் மிகக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
அட்சயா அட்சயா என்றால் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. அட்சய திருதியை நாள் நல்ல பலன்களையும் மாபெரும் வெற்றியையும் தரும். குறிப்பாக மங்களகரமான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம், இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் சொத்துக்களான இடம், வீடு, காடு, மனைகள், போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடுகிறோம்.
அட்சய திருதியை 2021 - 14/05/2021, வெள்ளிக் கிழமை
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு தொழிலும், காரியமும்,முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மைகளைக் கொடுக்கும், பன்மடங்காகப் பெருகும். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது, வாஸ்து பூஜை போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
அட்சய திருதியை மங்களகரமான திருநாளில், தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிகக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது,11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும், பாவ விமோசனம் ஏற்படும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.
முற்காலத்தில் நடந்த கதை: வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் இருப்பினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் ஒரு நாள் அட்சய திருதியை பற்றி கூறினர். அவன் ஓர் அட்சய திருதியை நாளில் பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அவனது மனைவி வறுமையின் காரணமாக அவனைத் தடுத்தும்கூட குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான். இதன் பயனாக அந்த வைசியன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரரே அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமுமான லட்சுமியை வணங்குவார். அட்சய திருதியை நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்!
பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகப் பெரும்பாலான நகைக்கடைகள் "லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள், தங்க அணிகலன்கள் மற்றும் பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர். அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். காக்கும் கடவுளான பெருமாள் / திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதியை பகீரதன் தவம் செய்து சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் திருதியை நாளில்தான் இடம் பெற்று நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.
கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதி தேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.
நீங்கள் வாங்கும் விலைமதிப்பற்ற தங்க நகைகள், வெள்ளி, வைரம் மற்றும் எல்லா பத்திரங்களையும் மிக பாதுகாப்பாக வைக்க ஏ .எஸ்.கே 3 ஸ்டார் ஸ்டீல்சின் தரமான, மிக பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் லாக்கர் சாவி கொண்ட அக்ஷயா பீரோவை வாங்குங்கள்.
அக்ஷயா பீரோ - Akshaya Steel Bero Colours - Pink, Blue, Green, Purple or Violet. Full powder coated painting.
அக்ஷயா பீரோ- Akshaya Steel Bero Wooden Pattern Colours - Rosewood, Teakwood and Walnut Pepperfry. Full powder coated painting,
அக்ஷயா இரும்பு பீரோ டாடா ஸ்டீல் சீட் மற்றும் ஏ.பி.எல் அப்பல்லோ ஸ்டீல் பைப்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் இன்டர்போன் (உள்புறம்) மற்றும் ஏசியன் பெய்ன்ட்ஸ் (கதவுகள்) பவுடர் கோட் பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது. இது வலுவான பெயின்ட் என்பதால் எந்த காலத்திலும் எப்பொழுதும் நிலையாக இருக்கும். பவுடர் கோட் பெயின்டிங் கார்களுக்கு பெயிண்ட் செய்யும் முறையாகும், இது சாதாரண பெயின்ட்டை விட பன்மடங்கு சிறந்தது, நிலையானது மற்றும் வலுவானது.
அட்சய திருதியை 2021 - 14/05/2021, வெள்ளிக் கிழமை
A.S.K 3 ஸ்டார் ஸ்டீல்ஸ் அக் ஷயா பீரோ ஆன்லைனில் https://ask3starsteels.in இல் வாங்க கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளும் பகுதிகளுக்கும் நாங்கள் பீரோவை டெலிவரி செய்கிறோம். இன்றே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.
Buy Akshaya Bero Now at https://ask3starsteels.in/wardrobe-cupboard-almirah-bureau-bero/akshaya-luxury-wardrobe-cupboard-42inch-india
சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பழனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, அவினாஷி, கொச்சின், ஹைதராபாத், சிதம்பரத்திலுள்ள எங்கள் அங்கீகரிக்கப்பட்ட பர்னிச்சர் கடைகளுக்கு சென்று வாங்குங்கள். மேலும் தகவல்களுக்கு 8300 111 775 ஐ அழைக்கவும் அல்லது sales@ask3starsteels.in இமெயில் செய்யவும்.